ஜெயலலிதாவை மிஞ்சினார் வி கே சசிகலா?

09 February 2021

ஜெயலலிதாவை மிஞ்சினார் வி கே சசிகலா?

23.30 மணிநேரம் தொண்டர்கள்  வரவேற்பில் ஜெயலலிதாவை மிஞ்சினார் சசிகலா   என்று கூறப்படுகிறது

பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். மீண்டும் தனது காரில் அதிமுக கொடியை பறக்கவிட்டதன் மூலம் அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்..


இந்நிலையில் சசிகலா வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் " தொண்டர்கள் என்னை பார்க்க ஆவலோடு காத்திருந்தனர்.


எம்.ஜி.ஆர் வழிவந்த ஓரணியின் இணைந்து நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.. கட்சியினர் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.. சோதனைக் கண்ட கழகம், மீண்டும் பீனிக்ஸ் பறவையாக எழும்.. அன்புக்கு நான் அடிமை.. கொண்ட கொள்கைக்கு நான் அடிமை.. இந்த தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை.. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன்.. தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.. " என்று தெரிவித்தார்.


அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் " அது அவர்களின் பயத்தை காட்டுகிறது.. என்று தெரிவித்தார். அதிமுக கட்சியை கைப்பற்றுவீர்கள் என்று தொண்டர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து நீங்கள் கட்சியை கைப்பற்றுவீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.. அதற்கு மிக விரைவில் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கமளிப்பதாக சசிகலா கூறினார்.


அதிமுக அலுவலகம் செல்வீர்களா என்று கேள்விக்கு, " பொறுத்திருந்து பாருங்கள்" என்று சசிகலா பதிலளித்தார். ஏன் அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது என்று கேட்ட கேள்விக்கு.. அதற்காக பதில் மக்களுக்கு நன்றாக தெரியும் என்று சசிகலா பதிலளித்தார். விரைவில் அனைவரையும் சந்திப்பேன் என்றும் சசிகலா தெரிவித்தார்.