ஜப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவு

01 May 2021

ஜப்பான் நாட்டிலுள்ள இஷினோமகி, இஷினோமகி ஷி, மியாகி ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக German Research Centre for Geosciences (GFZ) தெரிவித்துள்ளது.

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியான இஷினோமகிக்கு தென்கிழக்கில் 45 கிலோ தொலைவில், 63 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.7 ஆக பதிவானது. எனினும் ரிக்டர் அளவில் 6.6, 6.8, 6.9 பதிவானதாக வேறுவேறு நிலநடுக்க ஆய்வு மையங்கள் வெவ்வேறு விதமாக அளவுகோலை கணித்துள்ளன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.