"ஜெய்ஹிந்த்" என்பது வெறும் வார்த்தை அல்ல அது இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் உணர்ச்சி முழக்கம்!

25 June 2021

"ஜெய்ஹிந்த்" என்பது வெறும் வார்த்தை அல்ல அது இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் உணர்ச்சி முழக்கம்.

ஜெய்ஹிந்த் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட வார்த்தை. இன்னும் சொல்லப்போனால் மத ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட வார்த்தை.

தமிழ் விடுதலை போராட்ட வீரரான செண்பகராமன் பிள்ளை முழங்கிய வீரமுழக்கம் "ஜெய்ஹிந்த்"

ஜெய் ஹிந்துஸ்தானி என்ற வார்த்தையில் இருந்து தான் "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தை உதயமானது.

இந்த ஜெய்ஹிந்த் என்கிற வார்த்தையை நமக்குத் தந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளராக பணியாற்றிய அபித் ஹாசன் எனும் இஸ்லாமியர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் 1942-1945 வரை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார் அபித்ஹாசன்.

இந்திய தேசிய ராணுவத்தில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் என பல மதங்களை சேர்ந்த வீரர்களும் இருந்தனர்.

இந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் தாங்கள் சந்தித்துக் கொள்ளும் போது ஹிந்துக்களாக இருந்தால் "ராம் ராம்" என்றும் இஸ்லாமியர்களாக இருந்தால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றும் பரஸ்பரம் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வார்கள்.

இதனைக் கண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இது ஏதோ மத பிரிவினையை ஏற்படுத்துவது போல உள்ளது. இந்திய தேசிய ராணுவம் மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

எனவே "ராம் ராம்" "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதுபோன்ற மதங்களை குறிக்கும் வார்த்தைகளுக்கு பதிலாக பொதுவான ஒரு வார்த்தையை உருவாக்க வேண்டும் என நினைத்து உருவாக்கியதுதான் "ஜெய் ஹிந்துஸ்தானம்" என்ற வார்த்தை.

இந்த வார்த்தையை அவரது உதவியாளராக இருந்த அபித்ஹாசனிம் தெரிவித்து இது எப்படி உள்ளது என அபிப்ராயம் கேட்க "ஜெய் ஹிந்துஸ்தானம்" என்பது ஏதோ நீளமான முழக்கம் போல் உள்ளது. எனவே அனைவரும் பயன்படுத்தும் விதமாக சுருக்கமாக "ஜெய் ஹிந்த்" என்று வைக்கலாம் என கூற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூம் இரண்டு மூன்று முறை அதனை கூறிப்பார்த்து அது நன்றாக இனி இந்திய தேசிய ராணுவத்தில் இருக்கின்ற அனைவரும் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது " ஜெய்ஹிந்த்" என்று பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

அன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது தான் "ஜெய்ஹிந்த்" என்கிற வார்த்தை.

இதே ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரரான செண்பகராமன் பிள்ளையும் இதற்கும் முன்னரே முழங்கியவர்.

இன்னும் சொல்லப்போனால் மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக தனது பெயருக்குப் பின்னால் ஹிந்து மதத்தின் காவி வண்ணத்தை குறிக்கும் ஆங்கில வார்த்தையான "Saffron" ஐ தனது பெயருக்குப் பின்னால் இணைத்து தமது பெயரை "Abid Hasan Safrani" என்று மாற்றிக் கொண்டார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் அது இந்தியாவின் தேசிய முழக்கமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அபித் ஹாசன் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவுத் துறை அதிகாரியாகவும் பல நாடுகளுக்கு தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜெய்ஹிந்த் என்கிற வார்த்தைக்கு பின்னால் இத்தனை பெரிய வரலாறும் தியாகமும் வீரமும் அடங்கியிருக்கிறது.

ஆனால் பதவிக்காக சுய மரியாதையையும் அடையாளத்தையும் அடகு வைக்கும் சில ஈனப் பிறவிகளுக்கு வேண்டுமானால் இதன் அருமையோ வரலாறோ தெரியாமல் புரியாமல் இருக்கலாம்.ஆனால் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உரக்க சொல்வோம் "ஜெய்ஹிந்த்".