சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.

29 August 2021


வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டின் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கே.கே. நகர், ஆதம்பாக்கம், கூடுவாஞ்சேரி, நந்தம்பாக்கம், அயனாவரம், திருவான்மியூர், திருவேற்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பொழிந்தது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இடி மின்னலோடு பலத்த காற்றும் வீசியதால் சில இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. சென்னையில் 3 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பதிவாகி இருப்பதாக தெரிகிறது.