வெரிக்கோஸ் நோய்க்கு தீர்வு உண்டா டாக்டர் ?

06 February 2021

வெரிக்கோஸ் நோய்க்கு தீர்வு உண்டா டாக்டர் ?

வெரிக்­கோஸ் தமி­ழில் சுருள்­சிரை நாளங்­கள் என்று அழைக்­கப்­ப­டும். இது கடு­மை­யான வலியை ஏற்­ப­டுத்­தாத நோய் என்­ப­தால் ,பெரும்­பா­லும் இறு­திக் கட்­டங்­க­ளி­லேயே நோயாளி வைத்­தி­யரை அணு­கு­வது வழமை. இரு­பா­லா­ருக்­கும் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­யா­யி­னும் , ஒப்­பீட்­ட­ள­வில் பெண்­களே அதி­கம் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்! 

தொடைக்கு கீழ்/முழங்­கால்­க­ளுக்கு பின்­பு­ற­மாக நரம்­பு­கள் முடிச்­சு­கள்
­போல தென்­ப­டும். புடைத்­துக் கொண்டு காணப்­ப­டும்.

சில­வே­ளை­க­ளில் கடும் நீல­நிற நிற­மாற்­றம் கூட ஏற்­ப­டும்.

பாதங்­க­ளில் இலே­சான வீக்­கம் உண்­டா­கும்.(ஓய்­வாக இருக்­கை­யில் குறை­வாக இருக்­கும்)

சில­வே­ளை­க­ளில் அரிப்பு ஏற்­பட்டு, சொறி­வ­தால் கால்­க­ளில் புண் உண்­டாகி நீண்­ட­கா­லம் மாறாத புண்­க­ளா­கக் காணப்­ப­டும்.

1.  வயோ­தி­பம் (இரத்த நாளங்­க­ளின் வால்வு நலி­வ­டை­தல்)
2. பரம்­பரை
3. உடற்­ப­ரு­மன் அதி­க­ரித்­தல்
4. நீண்­ட­நே­ரம் நிற்­கும் / இருக்­கும் தொழி­லா­ளர்
    (உதா­ர­ணம்: ஆசி­ரி­யர், கண்­டக்­டர்)
5. கர்ப்­ப­கா­லம் 
6. மலச்­சிக்­கல் – நீண்­ட­கா­லத்­துக்கு 


மேற்­கூ­றி­யவை உங்­க­ளுக்கு வெரிக்­கோஸ் ஏற்­பட தூண்­டு­த­லாக விளங்­கும் கார­ணி­கள். (Risk foctors) இங்கு அடிப்­ப­டைக்­கா­ர­ணம் இரத்த நாளங்­க­ளில் குரு­தி­ய­முக்­கம் அதி­க­ரிப்­ப­தே­யா­கும்.


எமது  உட­லின் அசுத்த இரத்­தத்தை  உட­லின் அனைத்துப் பாகங்­க­ளி­லு­மி­ருந்து இத­யத்­துக்கு கொண்டு செல்­வது நாளங்­கள் (Veins) ஆகும்.
கட்­ட­மைப்­பில் ,இரத்­தத்தை மேல்­நோக்கி செலுத்­து­வ­தற்­கும் , கீழ் நோக்கி வரு­வதை தடுப்­ப­தற்­கு­மான பொறி­முறை காணப்­ப­டு­கி­றது.-இதற்கு வால்வு என்று பெயர். இவ்­வால்வ்வின் பணி­யில் குறை­பாடு ஏற்­ப­டும்­போது உட­லின் கீழ்ப் பகு­தி­யி­லுள்ள இரத்­தம் இத­யத்­துக்கு செல்­வ­தில் சிக்­கல் ஏற்­பட்டு ,தேக்­க­நிலை ஏற்­பட்டு (Pooling of blood) இரத்த நாளங்­கள் புடைத்து வீங்­கு­வதை வெரிக்­கோஸ் என்­கின்­றோம்.
‘வெரிக்­கோஸ் வெயின்’ பிரச்­சி­னைக்கு ‘நிரந்­தர’ தீர்வு இல்லை என்­பது ஒரு கசப்­பான உண்மை. (Duplex Scan) –டுப்­லெக்ஸ் ஸ்கான் செய்து பார்த்த, எந்த இடத்­தி­லுள்ள இரத்த நாள வால்வு பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதைத் துல்­லி­ய­மாக அறிந்து மேல­திக சிகிச்சை அளிப்­போம். வெரிக்­கோஸ் உள்ள இடங்­க­ளில் ஆறாத புண், கடு­மை­யான  நிற­மாற்­றத்­து
­டன் கூடிய தோல்­த­டிப்பு ஏற்­ப­டு­கை­யில், அறு­வை­சி­கிச்சை செய்ய நேரி­ட­லாம். தற்­பொ­ழுது லேச­ரி­னா­லும் சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. அறுவைச் சிகிச்சை செய்த பின்­பும் உரிய வாழ்­வி­யல் நடை­முறை மாற்­றங்­க­ளை (Life style modification) வைத்­தி­ய­ரின் அறி­வு­ரைப்­படி மேற்­கொள்­ளா­வி­டின்  மீண்­டும் இந்­நோய் ஏற்­பட வாய்ப்­புண்டு.


Compression Stockings :

இறுக்­க­மான சொக்ஸ் (பிரத்­தி­யே­க­மான, மருந்­த­கங்­க­ளில் கிடைக்­கும்) அணி­தல், தலை­ய­ணை­யிலோ, ஓய்­வாக இருக்­கும்­போதோ காலை உயர்த்தி வைத்­தி­ருத்­தல் (Limb Elevation) போன்­றவை வீட்­டில் நீங்­கள் வெரிக்­கோஸ் நோயா­ளி­யா­யின் செய்­யக்­கூ­டிய செயற்பாடுகள்.

மக்­கள் ஒன்­றைப் புரிந்துகொள்ள வேண்­டும் 
இது இரத்­த­ஓட்­டம் சம்­பந்­தப்­பட்ட நோய். உங்­கள் இரத்த ஓட்­டத்­தில் ஏற்­ப­டும் பாதிப்பு உங்­கள் கால்­களை செய­லி­ழக்கச் செய்­யும்வரை செல்­ல­லாம். எனவே அலட்­சி­ய­மின்றி, ஆரம்ப கட்­டத்­தி­லேயே மருத்­து­வரை நாடி­னால் அறுவைச் சிகிச்­சையி­லி­ருந்து தப்­பிக்­க­லாம். !!!

அடுத்த கேள்­விக்­கான பதில், வெரிக்­கோஸ் நோயைக் குணப்­ப­டுத்­து­வ­தால் உங்­க­ளுக்கு எவ்­வித பக்க விளை­வு­ க­ளும் ஏற்­ப­டாது.

Written By Dr. Priyaa Kamalasingam
DGH Chilaw, TH Jaffna , Srilanka