பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்.

23 February 2021

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி உள்ள பாஜக அரசை கண்டித்து அரசியல் டெமாக்ரடிக் யூனியன் தொழிற்சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்துவந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சிக்கந்தர்  கூறுகையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது இருந்த போதிலும் மத்திய பாஜக அரசு மக்களை வாட்டி வதைக்கும் வகையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை கடுமையாக விமர்சித்துள்ளது இதனால் அதனை சார்ந்த பொருட்கள் விலையும் உயரும். பொதுமக்கள் மீது திணிக்கப் பட்டிருந்த விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் மத்திய பாஜக அரசை வருகிற தேர்தலில் பொது மக்கள் தூக்கி எறிவார்கள் , இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.