ரெம்டெசிவர் தட ப்பு மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு!

15 April 2021

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ரெம்டெசிவர் மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மருந்து தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டார். கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, மருந்தின் உற்பத்தி குறைக்கப்பட்டதாகவும், தற்போது தாக்கம் அதிகரித்துள்ளதால் மருந்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் ரெம்டெசிவர் மருந்தினை அதிகளவில் உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய ஹர்ஸ்வர்தன்,மருந்தை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

புதிதாக 6 நிறுவனங்களுக்கு ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கூடுதலாக 10 லட்சம் மருந்துகள் கிடைக்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.