புதுக்கடை அருகே பார்மசி என்ற பெயரில் அனுமதியின்றி மதுக்கசாயம் விற்பனை

21 October 2021

புதுக்கடை அருகே பார்மசி என்ற பெயரில்
அனுமதியின்றி மதுக்கசாயம் விற்பனை.

புதுக்கடை அருகே பார்மசி என்ற பெயரில்
அனுமதியின்றி மதுக்கசாயம் விற்பனை நடந்ததாக
போலீசார் ஊறல்கள் மற்றும் மதுக்கசாயங்கள்
பறிமுதல் செய்து ஒற்றுவரை கைது செய்தனர்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே விழுந்தயம்பலம்
பகுதி பாலக்காவிலையில் அரசு அனுமதியில்லாமல்
மது கசாயம் விற்பனை அமோகமாக நடப்பதாக
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அந்த
பகுதியில் புதுக்கடை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்
அனில்குமார் தலைமயில் போலீசார் சோதனை
நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் பார்மசி என பெயர்
பலகை வைத்து விட்டு, கட்டிடத்தின் பின் பகுதி
வழியாக மது கசாயம் விற்பனை செய்வது கண்டு
பிடிக்கப்பட்டது. மேலும் உள்ளே சோதனை செய்ததில்
9 மண் பானைகளில் தலா 50 லிட்டர் வீதம் மது
கஷாய ஊறல்களும், மேலும் 750 மில்லி கொள்ளளவு
பாட்டில்களில் 53 பாட்டில் கசாயங்களும், மேலும் கேன்
ஒன்றில் 10 லிட்டர் கசாயங்களும் இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. இவற்றிக்கு உரிய அரசு அனுமதி
இல்லாத காரணத்தால் , தொடர்ந்து அவற்றை
போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆயிரத்து
560 ரூபாயும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம்
தொடர்பாக புதுக்கடை அருகேயுள்ள ஓச்சவிளை
பகுதி நேசய்யன் (86), மற்றும் கல்லுவிளை பகுதி
அருள்தாஸ்(55) ஆகியோர் மீது வழக்கு பதிவு
செய்தனர். இதில் அருள்தாஸ் கைது செய்ய பட்டார்.
மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகர்கோயில் செய்தியாளர் Siva