எதிர்காலத்தில் மோடியின் நண்பர் நிறுவனமான ஜியோ மட்டுமே இருக்கும்

21 January 2021

எதிர்காலத்தில் மோடியின் நண்பர் நிறுவனமான ஜியோ மட்டுமே இருக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி தராததினால் அந்த நிறுவனம் நசிந்து விட்டது காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிரடி பேட்டி
கரூர் மாவட்டத்திற்கு வரும் ராகுல் காந்தி 6 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது - அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி.

கரூர் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி,  25ம் தேதி ராகுல் காந்தி கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். எங்கள் அணி வெற்றி பெற தமிழகத்தில் மேற்கு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக கரூரில் விவசாயிகளை சந்திக்கிறார். 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாக ராகுல் காந்தி விவசாயிகளை சந்தித்து வருகிறார். சிறுபாண்மை மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுத்தும் விதமாக அவர்களையும் இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்கிறார். கரூர் மாவட்டத்தில் 6 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் வருகை தரும் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட வரவேற்பு அளிக்கும்  முன்னேற்பாடுகள் சிறப்பாக மாவட்ட காங்கிரஸ் கட்சியும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் செய்துள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் விரிவான விளக்கம் கொடுத்து இருக்கிறார். விவசாயிகள் பிரச்சினைகள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது. பொது விநியோக முறைக்கும் அடிப்படை ஆதார முறைக்கும் பெரிய வித்தியாசத்தை நாங்கள் தான் கொடுத்தோம். தானியங்களின் ஆதார விலையை அரசு எடுக்கக் கூடாது என்பது எங்க கோரிக்கை. ஆனால், வேளாண் சட்டத்தில் அது தொடர்பாக எங்கும் குறிப்பிடவில்லை. இதற்கு உதாரணம் பி.எஸ்.என்.எல். பி.எஸ்.என்.எல் தான் இந்தியாவின் மிகப் பெரிய தொலை தொடர்பு நிறுவனம். தனியாருக்கு மட்டும் 4ஜி வசதி கொடுத்து விட்டு பி எஸ் என் எல் நிறுவனத்திற்கு தராததால் நசிந்து விட்டது. எதிர்காலத்தில் மோடியின் நண்பர் நிறுவனமான ஜியோ மட்டுமே இருக்கும். அதுபோல தான் தற்போது வேளான் திட்டங்களின் நிலையும்.