ட்விட்டரில் டிரெண்டான ஹச்.ராஜா - #4கோடிவீடு !!

24 June 2021

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #4கோடிவீடு என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இணையவாசிகள் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர். 


 காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன், தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஏமாற்றிவிட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து ரூ.4 கோடி மதிப்பில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து, சமூக வலைத்தளமான டிவிட்டரில் #4கோடிவீடு என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இணையவாசிகள் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர்.