இதயத்தை இரும்பாகவும் ,நுரையீரலை நொறுங்காமலும் காக்க தினம் இதுல ஒரு கை பிடி போதும்

08 December 2021

பட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும். பைசம் சடய்வம்(ஆங்கிலம்:Pisum sativum ) என்று அறியப்படும் இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும்.

பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாகுவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர்.ஆனால் சமையல் கலையில் இவைகள் காய்களாகவே பயன் படுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் இவை பொதுவாகவே பச்சை பட்டாணி என்றே அழைக்கப் படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை நிறத்திலும், சில இடங்களில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பல நாடுகளில் இவை உறைய வைக்கப்பட்ட நிலையிலும் விற்கப்படுகிறது.உலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் இவை ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பணிக்கலாம் தொடங்கி வெயில் காலம் வரை, பயிரிடப்படும் இடத்திற்கேற்ப நடப்படுகிறது. ஒரு பட்டாணி விதை சுமார் ௦.1 முதல் ௦.36 கிராம் வரை இருக்கும்.சத்துகள்பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. காய்ந்த நிலையில் இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள். சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும். பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.