சாத்தூரில் தீ ஹீலர் அறக்கட்டளை சார்பில் மாற்றுதிறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு நிவாரன உதவி வழங்கப்பட்டது.

10 June 2021


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேதாஜி நகரில் சுமார் 25 மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான சுமார் 1600 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை ஹீலர் பவுண்டேஷன் நிறுவனர் சக்தி அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் நகர் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை அண்ணல் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 குடும்பங்களுக்கு இதுபோன்ற மளிகைப் பொருட்கள் மற்றும் காசோலைகளை மாவட்ட வாரியாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாத்தூர்
க.அருண் பாண்டியன்.