புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

09 September 2021


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட கட்டுப்பாடுகளுடன் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிலைகளை கரைக்கச் செல்லும்போது ஊர்வலத்திற்கு தடை போன்ற வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

காவல்துறை அனுமதி பெறாமல் எந்த இடத்திலும் சிலைகள் வைக்கக்கூடாது என்றும், சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 25 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.