இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் கீரைகடை. காம்

21 November 2020

மதுரையில் நுாறு வகை கீரைகளை காட்சிப்படுத்தி ‘பசுமை உணவு‘ அறிமுகம்
உலகில் முதல் முறையாக மதுரை விவசாய கல்லுாரியில் தொடக்கம்

இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் கீரைக்கடை.காம், நுாறு வகை கீரைகளை காட்சிப்படுத்தி பரவசமூட்டினர். புதிய கிரீன் மீல்ஸ் ஒன்றையும் அறிமுகம் செய்தனர்.

அகத்திக்கீரை, முருங்கை, பாலக்கீரை, வெந்தயக்கீரை... என, மதுரை விவசாயக்கல்லுாரியில் ‘பசுமை உணவை’, 2020 நவம்பர் 21ல் அறிமுகம் செய்தனர். மதுரையில் எஸ்.எஸ்.காலனி மற்றும் கே.கே நகர் ஆகிய இரண்டு விற்பனை மையங்களைக் கொண்டு துவக்கப்பட்டுள்ளது.

மதுரை வேளாண்மை கல்லுாரி, சமுதாய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்ப வணிக பொரிப்பகம், வேளாண் வணிக பொரிப்பக சங்கம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம் ஆகிவையுடன் இணைந்து கீரைக்கடை.காம், தமிழ்நாட்டின் பாரம்பரிய, ஆரோக்கிய உணவு கண்காட்சி மற்றும் பசுமை உணவை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

பசுமை உணவு லோகோவை, மதுரை அப்பலோ மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.வி சேகர் அறிமுகப்படுத்தினார். வேளாண் மற்றும் உணவு பதனிடுதல் நிபுணர் மற்றும் ஆவாரம் சூப்பர் புட்ஸ் நிறுவன இயக்குனர் டாக்டர் எம்.நாச்சிமுத்து முதலாவது பசுமை உணவை (கிரீனி மீல்ஸ்) துவக்கி வைத்தார். ஏசி அன்ட் ஆர்ஐ மதுரை டீன் டாக்டர் வி.கே பால்பாண்டி, சிஎஸ்சி அன்ட் ஆர்ஐ மதுரை டீன் டாக்டர் எஸ்.அமுதா, மதுரை எம்ஏபிஐஎப் தலைமை செயல் அதிகாரி பி.சிவக்குமார் மற்றும் கீரைக்கடை வெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் செயல் சமையலார் ஏ.எஸ் ராமலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர்.கீரைக்கடை.காம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் பிரசாத். ஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ உலகில் முதல் முறையாக உடனடி உணவு வகையாக ‘கிரீனி மீல்ஸ்’ எனப்படும், பசுமை உணவை, அறிமுகம் செய்துள்ளோம்.

வாழைப்பூ கூட்டு, கீரைக் கூட்டு மற்றும் வாழைத்தண்டு கூட்டு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், புதியதாக கண்டறியப்பட்ட கிரீனி மீல்ஸ், 250 கிராம், 85 ரூபாய். ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். தேவையான பொருட்களை உடனடியாக தயாரித்து, உடனே சமைத்து பேக்கிங் செய்கிறோம். உணவை பாதுகாக்கும் எவ்வித பொருட்களோ, ரசாயணமோ சேர்க்கப்படவில்லை.

நான்கு மடிப்புகளைக் கொண்ட பாக்கெட்டில், சூடாக்குதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி செய்துள்ளோம். உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி, சான்றிதழ் பெற்றுள்ளோம். கிரீனி மீல்ஸ்க்கு முதல் முதலாக காப்புரிமையும் பெற்றுள்ளோம். உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி, கிரீனி மீல்ஸ், கிரீன் டிப் போன்றவைகளை ஆஸ்தி ரேலியா, இலங்கை, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


கீரைக்கடை.காம் பற்றி:
கீரைக்கடை.காம் கோவை, மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120 க்கும் மேற்பட்ட கீரை வகைகளை விற்பனை செய்து வருகிறோம். இதன் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரியாக ஜி ஸ்ரீராம் பிரசாத் மற்றும் இணை நிறுவனர், தலைமை இயக்குனராக ஸ்ரீராம் சுப்ரமணியம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

எவ்வித இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கீரை பறிக்கப்பட்ட நான்கு மணி நேரத்துக்குள் விற்பனையாகிறது. இயற்கை வேளாண்மை முறையில், 120 வகையான கீரைகள் விளைவிக்கப்படுகின்றன.

சமைக்கப்பட்ட கீரைகள் மதியமும், மாலையில் கீரை சூப் வகைகளையும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2017 ல் துவக்கப்பட்ட இந்த நிறுவனம், டிசம்பர் 2017 ல் ஷோரூமை துவக்கியது. மார்ச் 2018 ல் உணவுகளை தயார் செய்தது. தற்போது, கிரீனி மீல்ஸ் துவக்கப்பட்டுள்ளது. இன்னும் பல உணவு வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.