பசுமை தஞ்சை தூய்மை தஞ்சை திட்டம்

03 March 2021

இந்திய மருத்துவ சங்க தஞ்சை கிளையின் சார்பில் பசுமை தஞ்சை தூய்மை தஞ்சை திட்டத்தை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் துவக்கி வைத்தார். 

இந்திய மருத்துவ சங்க தஞ்சை கிளையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள டாக்டர் சசிராஜ் அவர்கள் பல்வேறு சமுதாய நலப் பணிகளை செய்து வருகிறார். தற்போது பசுமை தஞ்சை தூய்மை தஞ்சை என்ற திட்டத்தினை துவங்கி இன்று தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை செல்வம் நகரில் ஒரு பகுதியினை தூய்மை செய்து மரக்கன்றுகள் நட்டு, புல் தோட்டம் அமைத்து பசுமை வெளியுடன் பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளார். 

இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி வார்டு 36 தூய்மை பணிக்காக காம்பாக்டர் குப்பைத்தொட்டி 2, குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டி 2, குப்பை சேகரிக்கும் பெரிய கூடை 8 ஆகியவற்றை துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களிடம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மூத்த மருத்துவர் டாக்டர் வரதராஜன் மற்றும் டாக்டர் சிங்காரவேலு ஆகியோர் வழங்கினார். 

செல்வம் நகர் பகுதியில் குடியிருப்போர் வீடுகளுக்கு தலா 2 குப்பைத் தொட்டிகளை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர் சாத்தப்பன் மற்றும் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து வார்டு 36ல் உள்ள அனைத்து துப்புறவு பணியாளர்களுக்கும் டாக்டர் சசிராஜ் குடும்பத்தினர் புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இந்திய மருத்துவ சங்க தஞ்சை கிளை செயலாளர் டாக்டர். நல்லதம்பி, பொருளாளர் டாக்டர் கார்த்திகேயன் உறுப்பினர்கள் டாக்டர் பாரதி, டாக்டர் சம்பத், பொறியாளர் சிவானந்தம், ரெட்கிராஸ் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்