போளூர் தாலுகாவில் செய்தியாளர்களுக்கும பாகுபாடுகாட்டும் அரசு அதிகாரிகள்.

05 May 2021

போளூர் தாலுகாவில்  செய்தியாளர்களுக்கும பாகுபாடுகாட்டும் அரசு அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் வட்டாட்சியர் அலுவலகம் பேரூராட்சி அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அரசு மருத்துவமனை  மற்றுமுள்ள அரசு அலுவலகங்களில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கும்  முன்னறிவிப்பின்றி ஆலோசனை கூட்டங்கள் தற்போது கொரோனா  போன்ற தகவல்கள், அரசு நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகிறது.

மேலும் போளூரில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களும் செய்தியாளர்களுக்கும்  மதிப்பளிக்காமல்   பாகுபாடு காட்டுகின்றனர். 

இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களும் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களும் முன்நின்று இதற்கு தீர்வு காண வேண்டும்  என பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


போளூர் செய்தியாளர் மணிமாறன்