தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.272 உயர்வு.

01 April 2022

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. ஏதோ ஒரு நாள் தங்கத்தின் விலை குறைந்தாலும், அடுத்த நாளே பெரிய அளவில் விலை அதிகரித்து விடுகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 272 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்த விலையேற்றம் தங்கத்தில் முதலீடு செய்ய காத்திருந்த இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 448 ரூபாய் வரை குறைந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் ஆழ்திருந்த நிலையில், இன்றைய விலையேற்றத்தால் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். நேற்று சவரனுக்கு ரூ24 என குறைந்த அளவு அதிகரித்த நிலையில், இன்று 272 ரூபாய் உயர்ந்திருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,793 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.ரூ.38,344 க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில் இன்று ஒரு கிராம் ரூ 4,834 க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,672 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலை இன்றும் அதிகரித்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே குறைந்து காணப்படும் வெள்ளி நேற்று ஒரு கிராம் 71 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையான நிலையில் இன்று 40 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 71 ரூபாய் 70 காசுகளுக்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.71,700 க்கு விற்பனையாகிறது.