பொதுமக்களுக்கு  பல்வேறு விதைகளால் ஆன  விநாயகர் வழங்கப்பட்டது

10 September 2021

கோவை புரோசோன் மாலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக  விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.விழாவையொட்டி மாலிற்கு வந்த பொதுமக்களுக்கு  பல்வேறு விதைகளால் ஆன  விநாயகர் வழங்கப்பட்டது…


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது வழக்கம்.இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புரோசோன் மாலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் முன்னதாக மாலிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.இதில் விநாயகர் ஓவியம் வரைந்த சிறந்த ஓவியர்களுக்கு 
களி மண்ணால் ஆன விதை விநாயகர் பரிசு வழங்கப்பட்டது.மேலும் மாலிற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாட்டு மரங்கள், செடி, கொடிகள், மூலிகை வகை விதைகளுடன் கூடிய விநாயகர் சிலை வழங்கப்பட்டது…