மணப்பாறையில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா.

22 February 2021

மணப்பாறையில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா.

மணப்பாறை பிப்21:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், சிறப்பு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா சனிக்கிழமை விராலிமலை சாலை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியர் நிஷாந்த்கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற விழாவில் வருவாய் வட்டாட்சியர் லஜபதிராஜ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், 22 கிராமங்களை சேர்ந்த 239 பயனாளிகளுக்கு ரூ,47 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களை சிறப்பு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், கோட்டாட்சியர் அலுவலர்கள், அதிமுக மாவட்ட பொருளாளர் நெட்ஸ் எம்.இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்,கே.எம்.முகமது இஸ்மாயில், நகர செயலாளர் பவுன் எம்.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எம்.பி.வெங்கடாசலம், என்.சேது, பி.வி.கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படவிளக்கம்: பயனாளி ஒருவருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர் மற்றும் அரசு அதிகாரிகள்.