கொள்ளிடம் தைக்கால் தர்காவில் கொடியேற்று விழா

25 March 2021

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி தர்காவில் இருந்து கொடி ஊர்வலமாக குதிரை மீது வைத்து முக்கிய வீதி மற்றும் தெருக்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் தர்காவை அடைந்தது. பின்னர் பாத்தியா ஓதப்பட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.