திரைப்பட நடிகர் தவசி பூரண குணம் அடைய வேண்டி கோவிலில் பிரார்த்தனை

20 November 2020

தமிழக திரைப்படத் துறையில் சிறப்பாக பணியாற்றி மக்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர் தவசி அவர்கள் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் தற்போது மதுரை சரவணா ஹாஸ்பிடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு திரைப்படத்துறையினர் உதவிகள் செய்து வருகிறார்கள் அவர் பூரண குணமடைய வேண்டி பல்வேறு கிராமங்களில் கோவில் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் இன்று சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் திரைப்பட நடிகர் புற்றுநோயால் அவதிப்படும் அவர்கள் பூரண குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று மசூதி சர்ச் போன்ற இடங்களில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.