பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி பாராட்டு!

11 June 2021


பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"நடந்தாள் வாழி காவேரி" இந்தவார்த்தை தஞ்சாவூர் விவசாயிகள் காதுகளில் தேனாகபாயும். ஆனாலும் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதுதஞ்சாவூர்விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல 15 மாவட்டங்கள் பிரச்சனை என்றுதான் தமிழர்கள் பலரும் பார்க்கிறோம் . சென்னை தொடங்கி ராமநாதபுரம் திருப்பூரிலிருந்து வேலூர் வரை ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரை தமிழகத்தின் 15 மாவட்டங்கள் குடிநீருக்காக காவிரியை தான் முழுமையாக நம்பியிருக்கின்றன காவிரி நீர் தண்ணீர் வந்து வீராணம் நிறைய விட்டாள் தலைநகர் சென்னையும் குடிநீருக்கு தவிக்க வேண்டியிருக்கும் 11 மாவட்டங்கள் பாசத்தோடு குடிநீராகவும் காவிரியே பயன்படுகிறது. தமிழகத்தின் உணவுத் தேவையில் 60 சதவீதத்துக்கு மேல் நெல் உற்பத்தி செய்ய காவிரியே மூல காரணம் . தமிழக மக்களின் 85 சதவீத மக்களின் குடிநீராக காவிரி நீரே குடிநீராகப் பயன்படுகிறது .26 மாவட்டங்களில் உயிர் நாடி காவிரியே 

உலக அளவில் நாகரீகங்களின் அடிப்படையாக ஆறுகள் தான் பார்க்கப்படுகின்றன.‌ பல தேசங்களின் அடையாளங்களாக திகழ்கின்றன . எகிப்தின் நைல் நதி லண்டன் தேம்ஸ் நதி ரஷ்யாவின் வால்கா நதி சீனாவின் மஞ்சள் நதி இந்தியா கங்கை என்றால் தமிழ்நாடு என்றதும் காவிரியே நம் நினைவில் நிற்கும் எல்லாம் இருந்தும் 2000 ஆண்டுகளாக உள்ள காவிரி உரிமை எல்லாம் கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக இழந்து வருகிறோம் . கர்நாடகா மேகத்தில் அணை கட்டிவிட்டால் அனைத்தும் பாழாகிவிடும் . தமிழகம் முழுவதும் பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது இப்போதே உணவு உற்பத்தியில் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் விளங்கி வரும் நிலையில் காவிரி நீர் தடைபட்டால் அரிசி உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழும் கர்நாடகத்தில் இருந்து கையேந்தி பெறவேண்டிய நிலை ஏற்படும் என்பதை 26 க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் உணர வேண்டும் . 
தமிழகத்திற்கு அமுதசுரபியாக விளங்கும் குடகு மலை சின்னஞ்சிறிய இயற்கை ஊற்று 4 அடிக்கு 4 அடி சதுரமான ஒரு தொட்டி இதன் பெயர் காவிரி குண்டம் இங்கேயேதான் காவிரி குடகு மலையில் உள்ள இந்த இடத்தில் தான் பிறக்கிறது காவிரி மேற்கு தொடர்ச்சி மலையில் பச்சை பசேலென காட்சியளிக்கும் குடகு பழங்காலங்களில் சோழர்கள் காடு என்ற பெயரோடு சோழ மன்னர்கள் ஆட்சி செய்த பூமி பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் வைத்த பெயர் கூர்க் மடிக்கேரியை( மெக்காரா) தலைநகராக கொண்டு தனி சமஸ்தானமாக இருந்த குடகு விடுதலைக்குப்பின் தனி மாகாணமாக திகழ்ந்தது 1956இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கர்நாடகாவுக்கு சொந்தமானது 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய காவிரி ஆயிரம் ஆண்டுகளுக்கு உள்ளாக தற்போதைய வடிவத்தை பெற்றிருக்கிறது காவிரியின் மொத்த தூரம் 800 கிலோ மீட்டர் கர்நாடகத்தில் 320 கிலோ மீட்டர் தமிழகத்தில் 416 கிலோமீட்டர் ஓடும் காவிரி இரு மாநில எல்லையில் அறுபத்தி நாலு கிலோமீட்டர் பயணிக்கிறது கர்நாடகாவை வளமாக்கும் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிருஷ்ணா அதேபோல துங்கபத்ரா போன்ற நதிகள் ஓடுகின்றன மேலும் 21 ஆடுகள் பாய்ந்து கர்நாடகாவை வளமான பூமியாக வைத்திருக்கிறது . 

ஆனால் தமிழகத்தில் ஓடும் பெரிய நதி காவிரி தான் பாலாறு தென்பெண்ணை தாமிரபரணி கெடிலம் போன்ற நதிகள் ஓடினாலும் பெரிய அளவில் இதன் மூலம் பயன் கிடையாது மழை காலங்களை தவிர்த்து மற்ற காலங்களில் வறண்டு கிடக்கிறது தமிழகத்தை விட இரண்டு மடங்கு கர்நாடகம் நீர் வளம் கொண்டது ஆனால் தமிழகம் காவிரியை மட்டுமே பெரிதாக நம்பியுள்ளது இதனால்தான் நடந்தாய் வாழி காவேரி என்று கொண்டாடுகிறோம் இப்படிப்பட்ட பெருமைமிக்க காவிரியில் இருந்து வரும் நீரை தடுத்து மேட்டூரில் அணை கட்ட வேண்டும் என்று 1801 இல் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் மைசூர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது மெட்ராஸ் மாகாணத்தில் நிறைய பாசனத் திட்டங்களை மேற்கொண்ட ஆர்தர் காட்டன் 1835 இல் மேட்டூர் அணை திட்டத்தை கையில் எடுத்து நேரில் சென்று மைசூர் அரசு இடம் நேரில்சென்று அணைகட்ட கோரிக்கை வைக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது காலம் ஓடியது 1923 ஆம் ஆண்டில் மெட்ராஸ் கவர்னர்ஸ் எக்ஸிக்யூட்டிவ் கவுன்சில் உறுப்பினர் சட்டமேதை சிபி ராமசாமி ஐயர் இருந்தபோது அவரிடம் தஞ்சை விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மேட்டூரில் அணைக்கட்டும் கோரிக்கையை முன்வைத்தனர் அவரும் மைசூர் அரசுக்கு எடுத்துச் சென்று கோரிக்கையை முன்வைத்தார் நமது கோரிக்கை மறுக்கப்பட்டது .

    இப்போதும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை அதன் பிறகு மெட்ராஸ் நிர்வாகம் அதிரடியாகவிவசாயிகள் சங்க பிரதிநிதிகளை ஆலோசித்து ஒரு கோரிக்கையை முன்வைத்தது புயல் மழை காலங்களில் காவிரியில் வரும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக கர்நாடக அரசு இழப்பீடாக ஆண்டுதோறும் ரூபாய் 30 லட்சம் ரூபாய் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு மைசூர் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது அப்போது ஒரு பவுன் தங்கம் 21 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தது இவ்வளவு பெரிய தொகை என்பதை தங்களால் கொடுக்க இயலாது என்ற நிலையில் மீண்டும் ராமசாமி அய்யர் பேசினார். வருடாவருடம் இழப்பீடு கொடுக்கப் போகிறீர்களா இல்லை நாங்கள் மேட்டூரில் அனைகட்டி கொள்ளலாமா என்று கேட்டபோது பணம் கொடுத்து மாளாது ஒப்புதல் கொடுத்து விடுவோம் என்ற முடிவுக்கு மைசூர் அரசு வந்தது அதன் பிறகு 1924இல் ஒரு ஒப்பந்தம் ஆனது 1924 மார்ச் 31 ஆம் தேதி இந்திய அரசுக்கு ஒப்புதலுக்கு வரைவு திட்டம் அனுப்பப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அனுமதி பெறப்பட்டது 1925 ஜூலை மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது .

    கர்னல் வில்லியம் மார்க் தலைமையிலும் வெங்கட்ராம ஐயர் தலைமையிலும் 24 பேர் கொண்ட பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டது பத்தாயிரம் தொழிலாளர்கள் அணை கட்டும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள் கடல் மட்டத்திலிருந்து 586 அடி உயரத்தில் அமையப்பெற்ற மேட்டூரில் அடித்தளம் அமைக்கப்பட்டது 586 அடி உயரத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு 791 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டது 205 அடி சுவர் எழுப்பப்பட்டது ஆயிரத்தி 700 மீட்டர் நீளம் அதாவது 5325 அடி நீளத்திற்கு அணை அமைக்கப்பட்டது 124 அடி உயரத்தில் 120 அடி மட்டுமே நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது 120 அடியை தாண்டினால் தானே வழிந்தோடி வெளியேறும் வகையில் உருவாக்கப்பட்டு ஆசியாவிலேயே மிக உயரமானதாகவும் உலக அளவில் பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகவும் 1934 ஜுலை 14 ஆம் நாள் மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டது அணையின் கட்டுமான செலவு ரூபாய் 4 கோடியே 80 லட்சம் அன்றைய மெட்ராஸ் ஆளுநர் ஜான் பிடரிக் ஸ்டான்லி 1934 ஆகஸ்ட் 21ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட்டு அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இன்றும் மேட்டூர் அணை என்று நாம் அழைத்தாலும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது மேட்டூர் நீர் தேக்கத்தில் 240 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் நிலையமும் அப்போதே கட்டப்பட்டது 1934ஆம் ஆண்டு தொடங்கி ஜூன் மாதம் 12ஆம் தேதி பதினேழு முறையும் அதற்கு முன்பே 10 முறையும் ஜூன் 12 க்கு பிறகு 60 முறையும் மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது .

2021 ஜூன் 12ஆம் தேதி 18வது முறையாக ஜூன் 12 இல் பாசனத்திற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாசனத்திற்காக அணையை இன்று திறந்துவைத்து வைத்துள்ளார்கள் காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாகவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சார்பாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட குழு சார்பிலும் வரவேற்கிறோம் முதல்வருக்கு எங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.தம்புசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

நிருபர் மீனா-திருவாரூர்