விவசாய விளை நிலங்கள் வழியே பெட்ரோலிய குழாய் அமைக்க வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு

14 June 2021


நாகை மாவட்டம் அரிமனத்திலிருந்து திருச்சி மாவட்டம்
வாளவந்தான்கோட்டையில்் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் சுத்தகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்ல விவசாய விளை நிலங்கள் வழியே எரிவாயு குழாய் அமைக்க வருவாய்த்துறை,காவல்துறை உதவியோடு ஐஓசிஎல் நிர்வாகம் பணியில் ஈடுபட்டு வந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூதலூர் தாலுக்கா வெண்டையம்பட்டி,இராயமுண்டான்பட்டி,நவலூர்,சுரக்குடிப்பட்டி கிராம மக்கள் பணி செய்ய வந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன வாகனங்களை சிறைபிடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உதவி ஆட்சியர்,பூதலூர் வட்டாட்சியர்,காவல் ஆய்வாளர்,இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன துணை பொது மேலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் மாலையும் தொடர்ந்து வருகிறது.