விருதாச்சலம் அருகே வடிகால் வாய்க்கால் தூர்வாராததால், 300 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த, நடவு பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.

05 October 2024

விருதாச்சலம் அருகே வடிகால் வாய்க்கால் தூர்வாராததால், 300 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த,  நடவு பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

  இதனால் விருத்தாச்சலம் அடுத்துள்ள மருங்கூர், கீரனூர், மேலப்பாளையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சம்பா சாகுபடிக்காக பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள்,  மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

 இதுகுறித்து விவசாயிகள் கூறுவது என்னவென்றால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக வடிகால் வாய்கால்களை தூர்வராமல், அலட்சியமாக இருந்த காரணத்தினால், வயலில் தேங்கியிருக்கும்,  மழைநீர் வெளியே செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

 மேலும் ஆட்கள் பற்றாக்குறையினால், பெரும்பாலான விவசாயிகள், இயந்திரத்தில் மூலம் நடவு பணியை மேற்கொண்டு வரும் நிலையில், அவ்வாறு இயந்திரத்தின் மூலம் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தான்,  பெருமளவில் மழை நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.  

ஒரு நாள் மழைக்கே, இந்த நிலை என்றால், இன்னும் பருவமழை  காலங்களில், விவசாயிகள் கடும் துயரத்திற்கு செல்ல கூடும் என்பதால், உடனடியாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விரைந்து கிராமப்புறங்களில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்