அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க சதி உளவு தகவலால் உச்சகட்ட பாதுகாப்பு

05 March 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 4-ந் தேதி (நேற்று) தாக்குதல் நடத்துவதற்கும், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் சதி செய்திருப்பதாக அமெரிக்க போலீசுக்கு நேற்றுமுன்தினம் உளவு தகவல் கிடைத்தது.இதுகுறித்து அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை எப்.பி.ஐ.யும், உள்நாட்டு பாதுகாப்பு துறையும் ஒரு அறிக்கை வெளியிட்டன.அந்த அறிக்கையில், "பிப்ரவரி பிற்பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாத குழுவினர், அமெரிக்க நாடாளுமன்றத்தை கைப்பற்றுவது குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் விவாதித்து உள்ளனர். அத்துடன் மார்ச் 4-ந் தேதிக்குள் ஜனநாயக கட்சி எம்.பி.க்களை அகற்றுவதற்கான திட்டம் குறித்தும் விவாதித்து இருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கானோரை வாஷிங்டன் செல்ல வற்புறுத்தவும் விவாதித்து உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.இந்த உளவுத்தகவலை வாஷிங்டன் கேபிட்டல் போலீசார் உறுதி செய்தனர்.இந்த தகவலின் தன்மை காரணமாக இது குறித்த கூடுதல் விவரங்களை எங்களால் வழங்க முடியாது” என குறிப்பிட்டனர்.

பயங்கரவாதிகள் தாக்குதல் சதி திட்டம் தெரியவந்ததை அடுத்து வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது.