மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

30 April 2021

தமிழகத்தை ஆளப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு 

சி.என்.எக்ஸ்+ ரிபப்ளி க்: திமுக கூட்டணி- 160-170; அதிமுக கூட்டணி- 58-68; அமமுக- 4-6; ம.நீ.ம- 0-2; மற்றவை- 0   இடங்களை பிடிக்கும் என‌ கணிக்கப்பட்டுள்ளது. 

ஏ.பி.பி+ சி.வொட்டஸ்: திமுக கூட்டணி- 160-172; அதிமுக கூட்டணி- 58-70; அமமுக- 0-2; மநீம- 0-2; மற்றவை- 0 இடங்களை பிடிக்கும் என‌ கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்+ பி.எம்.எ.ஆர்.கியூ: திமுக கூட்டணி- 165-190; அதிமுக கூட்டணி- 40-65; அமமுக- 1-3; மநீம- 1-3; மற்றவை- 0-3 இடங்களைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டூடே+ ஆக்சிஸ்: திமுக கூட்டணி- 175-195; அதிமுக- 38-54; அமமுக- 1-2; மநீம- 0-2;  மற்றவை- 0-3 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசே தொடரும் எனவும், அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெல்லும் எனவும், மேற்கு வங்காளத்தில் தொங்கு சட்டமன்றம் வரலாம் எனவும், புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் எனவும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாவது வழக்கம். ஆனால் இது கூறும் தரவுகள் எல்லா தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிப்பதில்லை. மக்களின் தீர்ப்பு மே 2 ல் முழுமையாக தெரியவரும்.