மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

04 October 2021

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ராம்குமார் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு.

 இவர் கடந்த "2 1/2 ஆண்டுகளுக்கு முன்  மின்சாரம் தாக்கியதால் இரு கைகளையும் இழந்தார், இந்நிலையில் 1 ஆண்டுக்கு முன்னர் தனது உறவினர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த பிரவீனா என்கிற பெண் அறிமுகம் ஆனார், பிரவீனா ஆன் லைனில் வழியே ட்ரேடிங் செய்வதாகவும், பணம் கொடுத்தால் பன்மடங்குடன் திருப்பி தருவதாகவும் கூறியதால் 2 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்,  துவங்க காலத்தில் 36 ஆயிரம் ரூபாயை பிரவீனா வழங்கினார், பின்னர் பணம் வழங்கவில்லை, பிரவீனாவிடம் பணத்தை திருப்பி கேட்ட போது என் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக பிரவீனா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும்,அவர்  உறவினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர், இதனால் தானும், தன் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம், ஆகவே என்னுடைய பணத்தை திரும்ப பெற்று தருவதோடு பிரவீனா மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.