12 ஆம் வகுப்புத் மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிப்பு

22 July 2021


தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.


12 ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கான துணைத்தேர்வுக்கு நாளை முதல் வரும் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொதுத்தெர்வு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கான விருப்பத் தேர்வுகளும் இதே தேதிகளில் நடக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வு எழுத விருப்பமுள்ளோர் நாளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குநரகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.