ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது

15 July 2022

ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்; 4 மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவு.

ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தம் செய்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை, பெருந்துறை, சேலம் மருத்துவமனைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என கூறினார்.