முன்கூட்டியே கண்டறிவதால் புற்றுநோய் இறப்பு விகிதத்தை பாதியாக்கலாம் !

03 February 2021

முன்கூட்டியே கண்டறிவதால் புற்றுநோய் இறப்பு விகிதத்தை பாதியாக்கலாம் ! 

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கருத்து உலக புற்றுநோய் தினமான இன்று செய்தியாளர்களை சந்தித்த மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வல்லுனர்கள் கூறிய தாவது:

தடுக்கக்கூடியதாகவும் குணப்படுத்தக்கூடியதாகவும் உள்ள போதிலும் , இந்தியாவில் மரணங்களுக்கான முதன்மை காரணமாக , இதயநோய்களுக்கு அடுத்து புற்றுநோய்கள் திகழ்கின்றன நாட்டிலேயே ஐந்தாவது அதிகபட்ச மார்பக புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையை தமிழகம் கொண்டுள்ளது பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடாகும் இந்தியாவிலும் , தமிழகம் போன்ற மாநிலங்களிலும் , புற்றுநோயை இறுதிகட்டத்தில் , முற்றிய நிலையை எட்டிய பிறகே கண்டறியப்படும் போக்கு அதிகம் காணப்படுகிறது அவ்வாறு தாமதமாகக் கண்டறியப்படும் நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை . இதற்கு முற்றிலும் எதிராக அனைத்து வகையான புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளின் வெற்றி விகிதம் அதிகரித்து வருகிறது சிலவற்றுக்கு 99 % வரை என்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் பரிசோதனைகளை பிரபலப்படுத்துவதன் மூலமும் , விரிவான ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவ உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமும் நாட்டின் புற்று நோய் இறப்புகளை இப்போதிருக்கும் நிலையில் பாதியாக குறைக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி அனுசரிக்கப்படும் தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் நேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் 4 % அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினர் . நமது நாட்டிலேயே ஐந்தாவது அதிகபட்ச மார்பக புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையை தமிழகம் கொண்டுள்ளதையும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடு என்பதையும் அவர்கள் தெரிவித்தனர் . தனது உரையில் , மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவின் துறைத்தலைவர் , மருத்துவர்  கிருஷ்ணகுமார் கூறியதாவது , உலகளவில் ஏற்படும் இறப்புகளில் , இல் புற்றுநோயால் ஏற்படுகிறது .