ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இம்மானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்!

11 September 2021

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய
இம்மானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்!

தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இம்மானுவேல் சேகரன் அவர்களின் 64-ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில்  அவரது நினைவையும், அவர் செய்த தியாகங்களையும் போற்றுவோம்.

இம்மானுவேல் சேகரன் மக்களின் உணர்வோடு கலந்தவர். தமது மக்களின் சமூக விடுதலைக்காக போராடியவர்.

இம்மானுவேல் சேகரன் மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு. அதனால் தான் ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த தியாகியின் நினைவிடம் சீரழிந்து கிடந்ததை சகித்துக் கொள்ள முடியாமல் எனது சொந்த செலவில் அதை சீரமைத்தேன். அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக தான் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறது. நானும் பலமுறை நேரில் சென்று மரியாதை செய்திருக்கிறேன் என ராமதாஸ் கூறியுள்ளார்.