உங்க தலையில் வெள்ளை முடி அதிகமா இருக்கா? இதனை எப்படி போக்கலாம்?

08 October 2021

மேலும் பலரும் நரை முடி மறைய பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது. இருப்பினும் இதற்கு ஒரு சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றை சரியாக பயன்படுத்தினாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.  

அந்தவகையில் தற்போது நரைமுடியை வெள்ளையாக்க என்ன மாதிரியான வழிகளை பின்பற்றலாம் என்று இங்கே பார்ப்போம்.

ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்த செயலை தினமும் என சில நாட்கள் செய்து வருவதன் மூலம், வெள்ளை முடியைப் போக்கலாம்.

ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பின் அந்த வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.  அதன் பின் அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.  வெங்காயம் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆகவே ஷாம்பு எதையாவது பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

ஒரு பௌலில் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.  இப்படி ஒருவர் தினந்தோறும் செய்து வந்தால், நிச்சயம் வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

கேரட் ஜூஸைக் குடிப்பதால், வெள்ளை முடி வருவது தடுக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். ஆகவே தினமும் தவறாமல் கேரட் ஜூஸைக் குடியுங்கள்.

எள்ளு விதைகளை அரைத்து பாதாம் எண்ணெயில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.  பின் அந்த எண்ணெயை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நீரால் அலச வேண்டும்.  முக்கியமாக இளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கு மன அழுத்தமும் ஓர் காரணம். எனவே மன அழுத்தத்தைக் குறைத்து, சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் நற்பதமான கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் முதல் அந்த எண்ணெயை தினந்தோறும் தலைமுடிக்கு தேய்த்து வாருங்கள்.

வெண்ணெயை அன்றாட டயட்டில் சேர்ப்பதோடு, வாரத்திற்கு 2-3 முறை மயிர்கால்களில் வெண்ணெயைத் தடவி ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலசுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.