தேமுதிக பொதுச்செயலாளர் ஆகிறார் பிரேமலதா?

14 December 2021

அதிமுக திமுக பாஜக என பிரதான கட்சிகள் தமிழக அரசியலில் பேசப்பட்டு வந்தாலும், தேமுதிக என்று ஒரு கட்சி உள்ளது என்பதை அடிக்கடி நியாபக படுத்த வேண்டி உள்ளது. ஆம், அப்படிபட்ட நிலைக்கு தான் தேமுதிக தள்ளப்பட்டுவிட்டது.

இதற்கு பலரும் பல்வேறு காரணங்களை  கூறுகின்றனர். சரி அதெல்லாம் நமக்கு எதற்கு தற்போது விஷயம் என்னவென்றால் தேமுதிகவின் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த் ஏற்க உள்ளதாக தகவல்கள் உறுதியாகி உள்ளன.மேலும் டிச.6ம் தேதி நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இதை பற்றி தான் பேசியுள்ளனர். காரணம் 2021 சட்டமன்ற தேர்தலில் நினைத்த மாதிரி கூட்டணி அமையவில்லை, பொருந்தா கூட்டணியாக தான் அமமுக, தேமுதிக கூட்டணி அமைந்தது. மாவட்ட செயலாளர்களை கூட்டி ஆலோசனை கேட்காமல் முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேர்தல் செலவுக்கு அமமுகசார்பில் கொடுக்கப்பட்ட பணத்தை சரியாக பிரித்து கொடுக்காமல் இருந்ததால் தான் தேர்தலில் தோற்றதாகன காரணங்கள் என்று மாவட்ட செயலாளர்கள் அந்த கூட்டத்தில் புலம்பினர்.

இதற்கும் மேலாக விஜயகாந்த் , ஆம் கட்சியின் பிரதான அடையாளமாக அறியப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த் அவருக்கு என்ன ஆயிற்று , உடல் நிலையில் என்ன முன்னேற்றம் உள்ளது. பிரச்சாரத்திற்கு வருவாரா என்று எல்லாம் கேள்வி கேட்டு பிரேமலதாவை துளைத்து எடுத்தனர். முன்பெல்லாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மட்டுமாவது விஜயகாந்த் பங்கேற்பார். தற்போது அதுவும் இல்லாமல் இருப்பதால் மா.செக்கள் கடும் அதிருப்தியில் மக்கள் மத்தியில் எதை சொல்லி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருந்தானர். 

இன்னும் சிலரோ தலைமை சரி இல்லை, கேப்டன் தொடங்கிய கட்சி அவரே இல்லையென்று ஆன போது நாங்கள் என்ன செய்வது என்று கட்சி தாவி வருகின்றனர். தேர்தலில் தான் வெற்றி பெற முடியவில்லை குறைந்த பட்சம் கட்சியையாவது காப்பற்றலாம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கேப்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது.குணமடைந்து வருகிறார் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கண்கலங்கி விட்டார் பிரேமலதா விஜயகாந்த்.சரி இனி கேப்டன் அரசியலில் தலைகாட்ட முடியாது அப்படி என்றால் நீங்கள் பொறுப்பேற்று கட்சியை வலி நடத்துங்கள் என்று தலைமையில் இருந்து மாவட்டசெயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் பிரேமலதாவிடம் கோரியுள்ளனர்.

அதாவது தானாக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றால் பிரச்சனை தேவை இல்லாத சலசலப்பு எழும் என்று நினைத்து தனது சகோதரர் சுதீஷ் மூலம் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறுகின்றனர்.வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனியாக களம் காணுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் பிரேமலதா பொறுப்பேற்றால் சசிகலாவிற்கு ஆதரவாக தான் நிற்பார் என்றும் அரசியல் வட்டரத்தினர் கூறுகின்றனர். தமிழகத்தில் ஜெயலலிதாவை தொடர்ந்து பெண் தலைமையிலான கட்சி , ஏற்கனவே சசிகலாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அதனால் தானும் ஒரு குட்டி ஜெயலலிதாவை போல் கட்சியை ராணுவம் போல் கொண்டு செல்வார் என்று அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.