இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  

06 September 2021

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

 

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தினை, முத்தையா இயக்குகிறார். விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முதல் முறையாக தனது படத்திற்கு யுவன் உடன் கூட்டணி அமைக்கிறார் முத்தையா.

 
கொம்பன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் முத்தையா உடன் கார்த்தி கூட்டணி அமைத்துள்ளார். தான் பணிபுரிந்த இயக்குனருடன் முதன்முறையாக இரண்டாவது படத்திற்காக கார்த்தி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.