நீரிழிவு சோதனை HbA1c என்றால் என்ன?
11 March 2021
நீரிழிவு சோதனை HbA1c என்றால் என்ன?
FBS(Fasting blood sugar) எனும் வெறும் வயிற்றில் உள்ள சீனியின் அளவை பரிசோதிக்கும் முறையினை விட ,
அதிக செலவாகும் இந்த HbA1c சோதனை முறையானது ஒரு நீரிழிவு நோயாளிக்கு ஏன் மேற்கொள்ளப்படுகிறது?
பொதுவாக நீரிழிவு நோயாளியொருவருக்கு, வெறும் வயிற்றில் (12 hours fasting) ஒரு முறையும், உணவு உட்கொண்ட பின் 2 மணித்தியாலங்கள் கழித்தும் (post prandial)இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை பரிசோதிப்பது வழமை.
ஆனால் இந்த 2 சோதனைகளையும் confirmatory test ஆக ,அதாவது நீரிழிவை உறுதிப்படுத்தும் சோதனை முடிவாக பயன்படுத்த இயலாது!!!
அதிலும் நம்மவர்கள் கில்லாடிகள். வைத்தியரை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டும் ,தனக்கு நீரிழிவு உண்டென ஒத்துக்கொள்ள இயலாத பட்சத்தில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதற்கும் ,சில வேடிக்கையான விஷயங்களை மேற்கொள்வர்.
சோதனை செய்யும் நாளைக்கு முன்னைய 24 மணித்தியாலத்தில் உணவினை குறைத்து உண்பது/ சீனியை அறவே தவிர்ப்பது ,போன்ற நடவடிக்கைகளால் ,சீனியின் அளவு குறையும் இத்தகைய தவறான பரிசோதனை முடிவுகளுடன்
வைத்தியரை அணுகும் போது ,நோயாளியை குணப்படுத்துவது என்பது எமக்கு பெரும் சவாலாக அமைகின்றது
இவ்வாறான பிரச்சினைகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட்டுவதே HBA1c.
இரத்தத்தில் உள்ள செங்குருதி அணுக்கள் 90-120 நாட்கள் வரை உயிர் வாழும் (3 மாதம்). இதிலுள்ள ஹீமோகுளோபின் எனும் புரதத்தின் ஒரு பகுதி நமது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸினை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ( Glycsylated haemoglobulin).
எனவே இதனை கணிப்பிடுவதே HbA1cஇனது தாற்பரியம்.
இதன்மூலம் கடந்த 3 மாதகாலப்பகுதியில் ,நோயாளியின் இரத்தத்தில் சேமிக்கப்பட்டுள்ள சீனியின் அளவு தெரிகிறது.
இங்கு HbA1c செய்வதற்கு வெறும் வயிற்றில் இருக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே நீரிழிவு உறுதிப்படுத்தும் சோதனையுமாகும்.
1.HbAC < 5.7 நீரிழிவு இல்லை
2.5.7 -6.4 நீரிழிவிற்கான அபாய நிலை
3. HbAC > 6.4 நீரிழிவு
4. 7-8 அதீத அபாய நிலை. உடனடி சிகிச்சை அவசியம்
நீரிழிவு நோயாளி ஒருவர் ஒரு வருடத்தில் குறைந்தது 3தடவை HbA1c செய்திருத்தல் அவசியமாகும்!!!
by Dr.Priyaa Kamalasingam
DGH Chilaw, TH Jaffna , Srilanka