ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

23 July 2021

 
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சிறப்பான மாதம் முழுதும் பக்தர்கள் பாதயாத்திரை வந்து சாமி தரிசனம் செய்வர். 

மேலும் மாதக் கடைசி வெள்ளியன்று ஆடிப்பெருந்திரு விழாவில் அம்மன் கோவில் வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

 இந்திருவிழாவிற்கு விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர் மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவிலில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் தரிசனத்திற்கு வரும் பொதுமக்கள் அரசு வழிகாட்டுதலின்படி முகக் கவசங்கள் அணிந்து கொண்டு உரிய சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி அறங்காவலர் குழு உறுப்பினர் பூசாரிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

சாத்தூர்
க.அருண் பாண்டியன்