தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சார்பில் நடைபெற்ற மண்டலாபிஷேக நிகழ்ச்சி

19 February 2021

தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சார்பில் நடைபெற்ற மண்டலாபிஷேக நிகழ்ச்சி

கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சார்பில் நடைபெற்ற மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பெருமாள் அருள் பெற்றனர்

கரூர் பெருமாள் வீதி மேட்டுத்தெருவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அபயபிரதான ரெங்கநாதசுவாமி ஆலய கும்பாபிஷேகம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதனையொட்டி, அக்கோயிலில் மண்டலாபிஷேக பூஜைகள் தினந்தோறும் நடைபெற்று வரும் நிலையில், இன்று கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சார்பாக இன்று காலை கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் மண்டலபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயிலின் திருத்தேருக்கு எண்ணை மற்றும் தடி போட்டு தேர் ஒட்டும் உரிமையுள்ள நீலிமேட்டினை சார்ந்த கார்த்திக் என்பவருக்கு பரிவட்டம்  கட்டப்பட்டது

கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் மாவட்ட தலைவர் மள்ளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் கனகராஜ், பொருளாளர் ரஞ்சித்குமார், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயகோபால், ஜெயபால், செல்வேந்திரன், வெங்கடேஷ்,. திருமுருகன், சுரேஷ், செல்வக்குமார், மருத்துவர் மணிகண்டன், மகேந்திரன், திராவிட செல்வன், பாண்டியன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.