ஏஐடியூசி பண்ணை தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை யில்ஆர்ப்பாட்டம்

23 February 2021

அரசு கால்நடைப் பண்ணைகளில் நேரடி நியமனத்தில் தற்போது பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 2-ஆம் தேதி ஏஐடியூசி பண்ணை தொழிலாளர்  சங்கம் சார்பில் தஞ்சை யில்ஆர்ப்பாட்டம்!

இன்று நடைபெற்ற. கூட்டத்தில் முடிவ!! தமிழ்நாடு அரசு பண்ணைத் தொழிலாளர்கள் சங்க கூட்டம் தஞ்சாவூர் கீழராஜ வீதியில் உள்ள ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பூ அரசப்பன் பண்ணைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் அவல நிலைகள் பற்றியும் அவர்களது ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு பணி நேரம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற விளக்கிப் பேசினார் ,கூட்டத்தில்ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், சங்க நிர்வாகிகள் கு. பகத்சிங், சுப்பிரமணியன் ,பி அமுதா ஆர் இந்திரா, புஷ்பவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஈச்சங்கோட்டை மற்றும் நடுவூர் கால்நடைப் பண்ணைகளில்  10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் பெண்கள் என  இரண்டு பண்ணைகளிலும் சுமார் 130 பேர் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது கால்நடை துறை நிர்வாகம் நேரடி நியமனம் செய்வதற்கு அழைப்பு விடுத்து பலர் விண்ணப்பித்து வருகின்றனர். கால்நடைப் பண்ணைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற  130 தொழிலாளர்களையும் நேரடி நியமனத்தில் முன்னுரிமை அளித்து அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட வேண்டும். கால்நடைப் பண்ணைகளில் தினக்கூலிகளாக பணிபுரிந்து  வருகின்ற தொழிலாளர்களுக்கு தினச் சம்பளம் 411 ரூபாய் வழங்கப்படுவதை தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப  சம்பளம் 600 ரூபாய் வழங்க வேண்டும்.  பண்ணைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு ,பணிநேரம் முறைப்படுத்துஎன்ற கூட்டத்தில் ஒரு.மனதாக முடிவெடுக்கப்பட்டது..முடிவுகளை வலியுறுத்தி ஏஐடியுசி கால்நடை பண்ணை தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தி துரை மதிவாணன்