ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போடும் திட்டத்தை உடனே நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை

13 January 2021

ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போடும் திட்டத்தை உடனே நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய, நியூஸிலந்து நோய்த் தடுப்புக் கழகம் அவ்வாறு வலியுறுத்தியிருப்பதாக Sydney Morning Herald ஊடக நிறுவனம் கூறியது.


AstraZeneca தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் அதன் செயல்திறன் 62 விழுக்காடு என்று தெரியவந்துள்ளது.


ஒப்புநோக்க Pfizer-BioNtech, Moderna ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் சுமார் 95 விழுக்காட்டுச் செயல் திறன் கொண்டவை.


எனவே, AstraZeneca தடுப்பூசியால் போதுமான எதிர்ப்பாற்றலை உருவாக்க முடியாமல் போகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


AstraZeneca விடமிருந்து சுமார் 54 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது.