ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் தள்ளுபடி

06 February 2021

ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

மதுரை பைக்காரா மேட்டுத்தெருவில் 12 இலட்சம் மதிப்பில் புதிய சாலை மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்காண பூமி பூஜை நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பங்கேற்றோர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில் "10 ஆண்டுகளில் அதிமுக அரசு 1 கோடியே 6 லட்சம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது, 4 ஆண்டுகளில் மட்டும் 33 ஆயிரத்து 590 கோடி விவசாய கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது, 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கையில் சொல்லப்பட்டது போல விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, 2006 ஆம் ஆண்டில் திமுக 5,360 விவசாய கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்தது, திமுக ஆட்சி காலத்தில் குறைந்த அளவே பயிர் கடன்கள் தள்ளுபடி செய்தது, அரசியல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, பயிர் கடன்கள் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசிதழில் அரசானை வெளியிடப்படும், 10 ஆண்டுகளில் 20,281 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு விவசாய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது, திமுக நாடாளுமன்ற தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், முதல்வரின் தனிப்பட்ட நடவடிக்கையால் பயிர் கடன்கள் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது, பயிர் கடன்கள் தள்ளுபடி என்பது தேர்தலுக்காக செய்யவில்லை, முதல்வர் அனைத்து பந்துகளை சிக்ஸர் அடித்து வருவதால் ஸ்டாலின் புலம்பி வருகிறார், பாஸ்ட் பால், ஸ்பின் பால், ஸ்பீடு பால் என அனைத்து பந்துகளை அடித்து வருகிறார், முதல்வர் நடவடிக்கையால் ஸ்டாலின் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து வருகிறார்" என கூறினார்