வந்தவாசி பிடிஓ அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

11 June 2021


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பிடிஓ அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வழூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திருமூர்த்தி தலைமையில், டாக்டர் மணிமேகலை அடங்கிய குழுக்கள் பங்கேற்று,அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம்‌, உடல் வெப்பநிலை உள்ளிட்டவைகளை சோதித்து, தடுப்பூசியை செலுத்தினர். இந்த முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.