இருளர் இன மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

10 June 2021


 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இங்கு உள்ள 25க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. எனவே கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர் வெ. அரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி, வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய அரிசி, மளிகை உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. வரும் வாரத்தில் இப்பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் கிராம உதவியாளர் அருள்ஜோதி, துணைத்தலைவர் சாந்தி முருகன், எக்ஸ்னோரா செயலாளர் கு. சதானந்தன், ஊராட்சி செயலர் பொற்கொடி, வார்டு உறுப்பினர்கள் நளினி தேவபிரகாஷ், ராஜராஜன், மணிகண்டன், புனிதா அண்ணப்பன், அஞ்சலி ராஜா மற்றும் கிராம தன்னார்வ இளைஞர்கள் பங்கேற்றனர்.