கொரோன சிறப்பு நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதில் குளருபடி....!

19 June 2021

*கொரோன சிறப்பு நிதி மற்றும் நிவாரண பொருட்கள்
வழங்குவதில் குளருபடி....* 

ஜூன். சனிக்கிழமை 19-06-2021
   கொரோன சிறப்பு நிதியின் இரண்டாவது தவணையாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த திங்கள் முதல் வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் உள்ள குடும்ப அட்டைகளுக்கும் வழங்கபடுகிறது. இதநிடையே வேப்பனபள்ளி பகுதியில் உள்ள ராமசந்திரம் நியாய விலை கடையில் 410 குடும்ப அட்டைகளுக்கு இரண்டு நாட்களாக பிரித்து வழங்கப்பட்டு வந்ததது. நேற்று மட்டும் முதல் 280 குடும்ப அட்டைகளுக்கு நிவாரண நிதி  2000 மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.மளிகை பொருட்கள் தீர்ந்ததால் மிதமுள்ள அட்டைகளுக்கு நாளை வழங்கப்படும் என்று நியாய விலை கடை ஊழியர் தெரிவித்தார். இத்தனைடையே இன்று வந்த ஊழியர் அவர் கூறியது : மிதமுள்ள மளிகை பொருள் வருவது இரண்டு நாட்கள் தாமதம் ஆகலாம் ஆதலால் இன்று கொரோன நிதி 2000 மட்டும் விநியோகிக்க எங்களுக்கு மேல் அதிகாரிகள் உத்தராவிட்டுள்ளாதாகவும் மளிகை பொருள்களுக்கு டோக்கன் தனியாக தரும்படி சொல்லியதாகவும் விருப்பம் உள்ள நபர்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லது இரண்டையும் ஒன்றாக பெற மேலும் இரண்டு நாள் ஆகலாம் என தகவல் தெரிவித்தார்.இதனிடையே குழப்பமடைந்த பொது மக்கள் அங்கிருந்த வார்டு உறுப்பினரிடம் மற்றும் பஞ்சாயத்து தலைவரிடம் தகவல் அளித்தனார்.அங்கு வந்த வார்டு உறுப்பினர் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் வழங்க வேண்டாம் இரண்டையும் ஒன்றாகவே வழங்கும்படி  ஊழியரிடம் பேச்சுவார்த்தை  நடத்தினார்.பின்பு பொதுமக்களை களைந்து செல்ல அறிவுருத்தப்பட்டது. வார்டு உறுப்பினர் கூறியாதாவது
இந்த கடையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு மண்ணெணை கடந்த அ தி மு க  ஆட்சில இருந்து வழங்கப்படுவதில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார்.எனவே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அனைவருக்கும் ஒன்றாக கிடைக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 *கொற்றவை  செய்தியாளர். மகேந்திரன்.*