இத்தாலியில் 21,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

04 April 2021

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 7-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், இத்தாலி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 21,261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,50,247 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மனி நேரத்தில் 376 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 704 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.74 லட்சத்தை கடந்துள்ளது. இத்தாலியில் தற்போது சுமார் 5.63 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.