ரஷ்யாவில் புதிதாக 8,646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

05 April 2021

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 45,89,540 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 343 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 717 ஆக (1,00,717) உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 42,11,133 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் தற்போது 2,77,690 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.