காங்கிரஸ் கட்சி சார்பில் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது...

14 November 2022

காங்கிரஸ் கட்சி சார்பில் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில்
முன்னாள் பாரத
பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் வழிகாட்டுதலின்படி சேவாதளம் மாவட்ட தலைவர் இ.முருகன் தலைமையில் ஜவர்கலால் நேருவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது,

அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில்
நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினத்தில் 
மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் எழுது பொருட்கள் இனிப்புகள் மற்றும் ஜவர்கலால் நேரு அவர்களின் முகம் பொரித்த முகமூடிகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர் மேலும்  மாணவர்களிடத்தில் ஜவஹர்லால் நேரு அவர்களைப் பற்றி பேசினார்கள் இந்த நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர்கள் பெரியசாமி, முனைவர் சீனிவாசன், சேந்தநாடு ரவி, நகரத் தலைவர் நல்ல குழந்தைவேல், இளைஞர் காங்கிரஸ் மோகனதாஸ், மாவட்ட மகளிர் அணி அமுதா பாலகிருஷ்ணன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் காளிராஜன், பெரியசாமி, நாகலிங்கம், பஞ்சநாதன், கலைமணி, ராமசாமி, ராஜசேகர், ஜானகிராமன், ஜேக்கப் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்... 

கொற்றவை
செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்