கோவை சத்யா நகர் பகுதி பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டது.

23 July 2021

கோவை சத்யா நகர் பகுதி பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டது.

கோவை  தி.மு.க. சுகுணாபுரம் பகுதி கழகம் சார்பாக ஒண்றிணைவோம் வா எனும் திட்டத்தில் சத்யா நகர் பகுதி பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டது…

கொரோனா கால ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒண்றிணைவோம் வா..எனும் திட்டத்தில்    தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும் தி.மு.க.தலைவரும் ஆன மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.இந்நிலையில் அவரது அறிவுறுத்தலின் படி,கோவை தி.மு.க  வடக்கு மாவட்டம்,சுகுணாபுரம் பகுதி கழக பொறுப்பாளர் மு.ராஜேந்திரன் பத்தாயிரம் பேருக்கு அரிசி,மற்றும் முட்டைகள் வழங்க முடிவு செய்தார்.அதன் படி கொரோனா கால நடைமுறைகளை பின்பற்றி பல்வேறு கட்டங்களாக வழங்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக ஆயிரம் பேருக்கு வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக 91 ஏ வார்டு, பி.கே.புதூர்  சத்யா நகர்,பார்வதி புரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் சுமார் ஐநூறு குடும்பங்களுக்கு அரிசி மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டது. இதனை  சுகுணாபுரம் பகுதி பொறுப்பாளர் மு.ராஜேந்திரன் அந்த பகுதி பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முட்டைகளை வழங்கினார்.இதில் பகுதி,வட்டக்கழகம்,கிளை நிர்வாகிகள்,மகளிர் அணி  உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்..