முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' - முதலமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

20 July 2021

சென்னை, கிண்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' விழா நடைபெற்றது. 


இந்நிகழ்வில், ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. இதன் மூலம், தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.