சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

22 July 2021


சிபிஎஸ்இஇ, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


சிபிஎஸ்சி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், கால அவகாசம் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, CBSE தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை, CBSE பள்ளிகள் வரும் 25-ஆம் தேதிக்குள்ளாக கணக்கிட வேண்டும் என்றும், கணக்கிடாத பள்ளிகளின் முடிவுகள் தாமதமாக வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். வரும் 31ம் தேதிக்குள்ளாக CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.