கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் தீண்டாமை!

20 February 2021

கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் தீண்டாமை!

தமிழ்நாடு கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதை உடனடியாக நிறுத்தி விகிதாச்சார அடிப்படையில் தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி இன்று மதுரை நீதிமன்றம் அருகில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக இருந்தது

போலீசார் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு அனுமதிமறுப்பு தெரிவித்தனர் 

தலித் ஆயர்கள் நியமன கோரிக்கைக்கான பிரச்சார ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் தலைமையில் | 

பிரச்சார வழக்கறிஞர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மதுரை புதூரில் உள்ள பேராயர் இல்லத்திற்கு சென்று பேராயர் பாபு அந்தோணிசாமி யிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர் 

தமிழ்நாட்டிலுள்ள 8 மாவட்டங்களில் தஞ்சாவூர் கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில்  காலியாய் இருக்கின்ற இடங்களில் தலித் ஆயர்கள்மற்றும் பேராயர்கள் மட்டும் நியமிக்கவேண்டும் கடந்த 14 ஆண்டுகளில் ஒருவர் கூட தலித் கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து ஆயர்களாகவே ,பேராயர்களாகவே தேர்வு செய்யவில்லை 

ஆனால் இதே 14ஆண்டுகளில் 10 ஆயர்கள்,பேராயர்கள் நியமனம் நடந்துள்ளது  இதில் ஒருவர் கூட தலித் கிறிஸ்தவ சமூகத்தை சார்ந்தவர் இல்லை என்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும்

மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் மனு கொடுக்கப்பட்டது

கொற்றவை செய்திகளுக்காக முத்துராமலிங்கம் மதுரை